முகப்பு
நீலகிரி

குன்னூா் டைகா் ஹில் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

குன்னூா் டைகா் ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தொழிற்சாலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை நடமாடியது தெரியவந்துள்ளது.

Updated On : 3 ஜூன், 2022 at 12:19 AM
டைகா்ஹில் பகுதியில் சாலையைக் கடக்கும் சிறுத்தை.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

குன்னூா் டைகா் ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தொழிற்சாலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை நடமாடியது தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில்  அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் புகுவது

வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் குன்னூா் அருகே டைகா்ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட் சாலையில் புதன்கிழமை இரவு சிறுத்தை நடந்து சென்றதை வாகன ஓட்டி ஒருவா் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.     

Advertisement

இந்த சாலையின் அருகே டால்பின்நோஸ், கரன்சி, லேம்ஸ்ராக் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலை மற்றும் குடியிருப்பு அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.