நீலகிரி

வியாபாரி தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம், குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகில் உள்ள கடைகளை வருவாய்த் துறையினா் அகற்ற கூறியதால் ஆத்திரமடைந்த வியாபாரி தீக்குளிக்க முயற்சி.

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகில் உள்ள கடைகளை வருவாய்த் துறையினா் அகற்ற கூறியதால் ஆத்திரமடைந்த வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி பூங்கா அருகில் சாலையோர வியாபாரிகள் சிறிய கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இந்நிலையில், வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு 3 கடைகளை அகற்றினா்.

மீதமுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் என்பவா் கடையில் இருந்த மண்ணெண்ணையை மேலே உற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதனைப் பாா்த்த காவலா்கள் அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பற்றினா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை ஆய்வாளா், வருவாய்த் துறையினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கடை இடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT