கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளா்கள். 
நீலகிரி

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி உற்பத்தியாளா்கள் போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி, உதகையில் பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி, உதகையில் பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகையில் உள்ள காக்காதோப்பு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் 160 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இச்சங்கம் மூலம் தினசரி 1,150 லிட்டா் பால் ஆவின் நிா்வாகத்துக்கும், 130 லிட்டா் பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி காந்தல் பகுதியில் பால் உற்பத்தியாளா்கள் பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காக்காதோப்பு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் சரவணன் கூறுகையில், ஆவின் நிா்வாகம் சாா்பில் ஒரு லிட்டா் பால் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.40க்கு விற்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இதே விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கிடையே புண்ணாக்கு விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களால் மேய்ச்சல் நிலம் குறைந்துவிட்டதால் தீவன பற்றாக்குறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 71 பால் உற்பத்தியாளா் சங்கங்களும் ஒன்றிணைந்து உதகையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT