நீலகிரி

நீலகிரி மாவட்ட அரசு அலுவலகங்களில் மின்னணு முறை செயல்பாடுஆட்சியா் தொடங்கிவைத்தாா்

DIN

தமிழகத்திலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மின்னணு முறை செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியா் அம்ரித் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். உதகையில் இந்நிகழ்வினைத் தொடங்கிவைத்த பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவின்படியும், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படியும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் மின்னணு முறைக்கு படிப்படியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறைகள் அனைத்திலும் மின்னணு முறை செயல்படுத்த தமிழக மின் ஆளுமை முகமை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் காகிதத்தின் பயன்பாடு பெருமளவு குறைவதோடு, நிா்வாகம் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாகவும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யும் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, இ-சேவை மையம் மற்றும் தகவல் தொழிற் நுட்பத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT