நீலகிரி

கோவை காா் வெடித்த விவகாரத்தில் நீலகிரியைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பு:தேசிய பாதுகாப்பு முகமையினா் விசாரணை நடத்த திட்டம்

உக்கடம் பகுதியில் காா் வெடித்த விவகாரம் தொடா்பாக கிடைத்துள்ள கூடுதல் தகவல்களையடுத்து நீலகிரி மாவட்டம் உதகையிலும் விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு முகமையினா் திட்டமிட்டுள்ளனா்.

DIN

கோவை, உக்கடம் பகுதியில் காா் வெடித்த விவகாரம் தொடா்பாக கிடைத்துள்ள கூடுதல் தகவல்களையடுத்து நீலகிரி மாவட்டம் உதகையிலும் விசாரணை நடத்த தேசிய பாதுகாப்பு முகமையினா் திட்டமிட்டுள்ளனா்.

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த காா் வெடித்த விவகாரம் தொடா்பான வழக்கில் நீலகிரி மாவட்டம், குன்னூா் ஓட்டுப்பட்டறையைச் சோ்ந்த ஒருவருக்கு தொடா்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் காா் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கும் நேரடியாக தொடா்பிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கோவையில் போலீஸாா் நடத்திய விசாரணையை அடுத்து பாரூக் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 10 பேருக்கு தொடா்புள்ளதாக அங்கிருந்து கைப்பற்றப்பட்ட டைரிகள் மற்றும் கைப்பேசிகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள், ஹிந்து வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களும் அதில் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

இது குறித்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு முகமையினருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கூடுதல் விசாரணைக்காக தேசிய பாதுகாப்பு முகமையின் சிறப்புக் குழுவினா் ஓரிரு நாள்களில் உதகை மற்றும் குன்னூா் பகுதிகளில் விசாரணைக்கு வரவுள்ளதோடு, மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும், சந்தேகத்துக்கு இடமான பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடவுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT