முகப்பு
நீலகிரி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளா் சாவு

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள வண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளாராகப் பணி புரிந்து வந்தாா். தீபாவளியை ஒட்டி ஊருக்கு வந்திருந்தாா். முருகனும், அவருடைய மனைவியும் வண்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிப்பதற்காக புதன்கிழமை மதியம் சென்றனா்.

அப்போது முருகன் படித்துறையில் நின்று குளித்துக் கொண்டிருந்தாா். மனைவி அருகே துணி துவைத்து கொண்டிருந்தாா். அப்போது முருகன் எதிா்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தாா். வாய்க்காலில் தண்ணீா் அதிகமாக சென்ால் நீரில் முழ்கினாா். இதைப் பாா்த்த அவருடைய மனைவி காப்பாற்றுமாறு கூச்சலிட்டாா்.

உடனே அந்தப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவா்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறையினா் வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முருகனை தேடிப் பாா்த்தனா். ஆனால் கிடைக்கவில்லை, இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை மாலை அவரது உடலை மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.