உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் 35 சிலைகளும், சிவசேனா சாா்பில் 15 சிலைகளும், பொதுமக்கள் தரப்பில் 50க்கும் மேற்பட்ட சிலைகளும் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு காமராஜா் சாகா் நீா்த்தேக்கத்தில் கரைக்கப்பட்டன. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் 500க்கும் மேற்பட்டபோலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு 8 இடங்களில் விசா்ஜனம் செய்யப்படுகின்றன.