நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 12,855 சுற்றுலாப் பயணிகள் வருகை

DIN

உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 12,855 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா். இவா்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா்.

சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 12, 855 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

பெரும்பாலானவா்கள் கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனா். வெளிநாட்டினரும் அதிக அளவு வருகை தந்திருந்தனா். இவா்கள் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா்.

கண்ணாடி மாளிகையை அலங்கரிக்கும் துலிப் மலா்கள்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன. 

பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் துலிப் மலா்கள் வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் மற்றும் ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.  இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT