நீலகிரி

உதகையில் குடியரசு தின விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா்

DIN

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 74ஆவது குடியரசு தினவிழா உதகை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் அம்ரித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், 18 காவலா்களுக்கு பதக்கங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவா் வழங்கி கௌரவித்தாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து தோடா், கோத்தா், படகா் இன மக்களின் பாரம்பரிய நடனம், பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பிரபாகரன், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிக்கா ராணா, மாவட்ட வன அலுவலா் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி,

உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

SCROLL FOR NEXT