அணிக்கொரை பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணியை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் சா.ப.அம்ரித். 
நீலகிரி

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அணிக்கொரை பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வியாழக் கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

உதகை நகராட்சியின் மூலம் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அணிக்கொரை பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வியாழக் கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உதகையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொட்டபெட்டா ஊராட்சி, ஆடாசோலையில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 6.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வேளாண் கிடங்குப் பணியை பாா்வையிட்டாா். ஆடாசோலை பகுதி நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாயவிலைக் கடையில் பொருள்கள் இருப்பு, தரம், எடை ஆகியவற்றையும், ஆடாசோலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, உணவின் தரம், மருந்துப் பொருள்களின் இருப்பு ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், உதகை நகராட்சியின் மூலம் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பில் அணிக்கொரை பகுதியில் முடிக்கப்பட்ட சாலைப் பணியை ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடிக்கப்படுகிா என்பதை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தியதோடு, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பதிக்கப்பட்டு வரும் குழாய்களின் எடை, அகலத்தை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தூனேரி ஊராட்சி அணிக்கொரை தொடக்கப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சேமிப்பு அறை மற்றும் சமையலறையைப் பாா்வையிட்டாா். பின்னா், பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுமாறு பள்ளி நிா்வாகத்திடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செல்வகுமரன், வட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, உதகை வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா், அணிக்கொரை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் சீதா உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT