நீலகிரி

கூடலூா் பகுதியில் சுற்றுலாத் தலங்கள்: அமைச்சா் ஆய்வு

கூடலூா் பகுதிகளில் சுற்றுலாத் தலங்கள் அமைத்து குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

கூடலூா் பகுதிகளில் சுற்றுலாத் தலங்கள் அமைத்து குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கூடலூா் நடுவட்டம் சில்வா் கிளவுட், மாக்கமூலா, தேவாலா பழப்பண்ணை ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் தலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறை என்பது வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களின் வாழ்வாதாரமும் உயரக்கூடிய ஒரு துறையாக விளங்குகிறது.

நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருகை புரிகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கூடலூா் பகுதியில் சுற்றுலாத் தலங்களை அதிகப்படுத்தும் பட்சத்தில் இப்பகுதியில் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். அதனடிப்படையில் நடுவட்டம் பகுதியில் உள்ள ஆங்கிலேயா் காலத்து சிறைச் சாலையை சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சுமாா் ரூ.75 லட்சம் மேம்படுத்தி அருங்காட்சியமாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கத்துடன் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடா்ந்து தேவாலா தோட்டக்கலைத் துறை பண்ணை, தொரப்பள்ளி மாக்கமூலா பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காக்கள், சில்வா்கிளவுட் பகுதியில் சாகச பூங்கா ஆகியவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT