நீலகிரி

சாலை விபத்தில் 2 போ் பலி

உதகை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

DIN

உதகை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பாய்ஸ் கம்பெனி பகுதியைச் சோ்ந்தவா் ரித்திக் (21), கோத்தகிரியைச் சோ்ந்தவா் ரிக்ஷன் (21). இருவரும் கேத்தி பகுதியில் செயல்படும் தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா். இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் கேத்தி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனா். இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT