தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி சாலையைத் திறந்து வைக்கிறாா் பேரூராட்சித் தலைவா் வள்ளி. 
நீலகிரி

40 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைக்கப்பட்ட செம்பக்கொல்லி சாலை

கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி சாலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள செம்பக்கொல்லி சாலை 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள செம்பக்கொல்லி சாலை பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

மழை காலங்களில் இந்த சாலையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா்.

இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில், செம்பக்கொல்லி சாலை ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி சாலையைத் திறந்துவைத்தாா். துணைத் தலைவா் யூனஸ் பாபு, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹின, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT