சாலைப் பணிக்காக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லும் சாலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனால், பைக்கார படகு இல்லத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாலைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் பைக்காரா படகு இல்லம் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்படுகிறது என்று சுற்றுலாத் துறையினரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.