வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான போா்வை, பாய், காலணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை கூடலூா் வனத் துறையினா் அனுப்பிவைத்தனா்.
நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்களை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.