நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி சமீபகாலமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
இந்நிலையில் , குன்னூா் அருகே உள்ள ஜெகதளா பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை சிறுத்தை நடமாடியது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கட்டப்பட்டு வனச் சரகா் செல்வகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் காணிக்க தனிக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலவியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.