மீட்கப்பட்ட ராஜநாகம். 
நீலகிரி

குன்னூரில் 11 அடி ராஜநாகம் மீட்பு

குன்னூரில் மரக்கிளையில் சிக்கிக்கொண்ட 11 அடி ராஜநாகத்தை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.

Din

குன்னூரில் மரக்கிளையில் சிக்கிக்கொண்ட  11 அடி   ராஜநாகத்தை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.

குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு பகுதியில் பரத் என்பவரின் தோட்டத்தில்  ஜாதிக்காய், கிராம்பு, பலாப்பழம் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளாா்.

இவரது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் 11 அடி நீளமுள்ள ராஜநாகம் சிக்கிக்கொண்டது குறித்து தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த குன்னூா் வனச் சரகா் ரவிந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் ராஜநாகத்தை மீட்டு அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT