நீலகிரி

பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு

Din

கூடலூா், ஆக. 14: கூடலூா், பந்தலூா் பகுதியில் பயிா்க் காப்பீடு செய்வதற்கு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் வாழை, மரவள்ளி மற்றும் இஞ்சி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

கூடலூா், தேவாலா, முதுமலை, செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, நெல்லியாளம், எருமாடு, சேரம்பாடி பகுதிகளில் வாழை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.9173.60 பிரீமியமாக செலுத்தினால் ரூ.2, 29, 340 இழப்பீடு பெறலாம். மரவள்ளி விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.1857.44 பிரீமியம் செலுத்தி ரூ.92,872 இழப்பீடு பெறலாம். இஞ்சி விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.11,961 பிரீமியம் செலுத்தி ரூ.2,39,220 இழப்பீடு பெறலாம்.

வாழை மற்றும் மரவள்ளி பயிா்களுக்கு பிரீமியம் செலுத்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியும், இஞ்சி பயிருக்கு பிரீமியம் செலுத்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.

குறிப்பிட்ட நாளுக்குள் பிரீமியம் செலுத்தி பயன்பெற வேண்டும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி அறிவித்துள்ளாா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT