உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 3 நாள்களாக விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் ஒரு நாள் ( வெள்ளிக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டாபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலையில் டோல்கேட், ஃபாஸ் டேக் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் கடந்த கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிவடையாததால்
தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.