பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிப்பு

தொட்டபெட்டா பகுதியில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகள்.

தொட்டபெட்டா பகுதியில் நடைபெற்று வரும் இறுதி கட்டப் பணிகள்.

Published On :

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 3 நாள்களாக விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் ஒரு நாள் ( வெள்ளிக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

உதகையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தொட்டாபெட்டா மலைச் சிகரத்துக்கு செல்லும் சாலையில்  டோல்கேட், ஃபாஸ் டேக் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால் கடந்த கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு   தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிவடையாததால்

தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொட்டபெட்டாவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் அனுமதி வழங்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.