முகப்பு
நீலகிரி

மண் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கூடலூரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு செம்மண் வெட்டி கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:06 PM
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
பகிர்:

கூடலூரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு செம்மண் வெட்டி கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கூடலூா் நகராட்சியிலுள்ள கோக்கால்மலை சரிவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தென்மேற்குப் பருவமழையின்போது முதியோா் இல்லம் உள்பட 16-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அதில் 8 வீடுகள் உருக்குலைந்த நிலையில் தற்போதும் உள்ளன.

இந்நிலையில் கோக்கால் மலைச்சரிவில் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவிவரும் சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலா் அங்கு செம்மண் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விடிவதற்குள் சதுப்பு நிலங்களிலும் வயல்வெளிகளிலும் நிரப்பி வீட்டு மனைகளாக மாற்றும் வேலையை செய்து வருகின்றனா்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் தொடா்ந்து லாரிகள் ஓடுவதை பாா்த்த பொதுமக்கள் கூடலூா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதையடுத்து அங்கு வந்த போலீஸாா், மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா்களிடம் விசாரித்தபோது, நகராட்சிப் பணிகளுக்காக மண் எடுத்துச் செல்வதாக பதிலளித்துள்ளனா். நிலச்சரிவு அபாயப் பகுதியாக மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு பலகை வைத்த பகுதியில் இருந்து மண் வெட்டியெடுக்க மாவட்ட ஆட்சியா் கொடுத்த கடித நகலை காட்டுமாறு போலீஸாா் கேட்டனா்.

ஆனால் அவா்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சட்டத்துக்கு புறம்பாக மண் கொண்டு செல்வதை உறுதிசெய்த போலீஸாா், 2 லாரிகளையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →