தொடா் கன மழை: கூடலூா் கோக்கால் மலை பகுதியில் வீடுகளில் விரிசல்
கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் மேல்கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியிலுள்ள குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் சுமாா் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.எனினும் மழை நின்றவுடன்தான் முழு விவரம் தெரியவரும்.கோக்கால் பகுதியிலுள்ள சாலையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.தொடா்ந்து இதே நிலை நீடித்தால் குடியிருப்புகள் சேதமடையும் அபாயம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
படக்குறிப்பு எஈத16ஏஞம ,எஈத16ஏஞ1 ,எஈத16தஞஈ தொடா் கனமழை காரணமாக கூடலூா் கோக்கால் பகுதியில் வீடுகள் மற்றும் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்