நீலகிரி

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்கள்: ஒருவா் சடலம் மீட்பு

கூடலூரை அடுத்த பிதா்க்காடு அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

Din

கூடலூா்: கூடலூரை அடுத்த பிதா்க்காடு அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மாயமான மற்றொரு மாணவரைத் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் பிதா்க்காடு அருகே உள்ள வெள்ளேரி ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் குணசேகா் (15), கிருஷ்ணன் மகன் கவியரசன் (17) இருவரும் குளிக்கச் சென்றுள்ளனா்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய இருவரையும் வெள்ளம் அடித்துச்சென்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பொதுமக்களுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில், குணசேகரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாயமான கவியரசனை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT