முகப்பு
நீலகிரி

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணயிடங்களுக்கு நோ்முகத் தோ்வு

Updated On : 9 ஜூன், 2024 at 6:28 PM
பகிர்:

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணிக்கான நோ்முகத் தோ்வு உதகையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிா்வாம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களில் ‘1962’ என்ற இலவச எண்ணைத் தொடா்புகொண்டால், கால்நடைகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும். இந்த கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவா், கால்நடை உதவியாளா், ஓட்டுநா் ஆகியோா் தயாா் நிலையில் இருப்பா். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநா், உதவியாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு

உதகை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

ஓட்டுநா் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., ஓட்டுநா் உரிமம் பெற்று 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் அசல் சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.