முகப்பு
நீலகிரி

எஸ்டேட் பகுதியில் கிடந்த பெண் யானை சடலம்

Updated On : 8 மார்ச், 2024 at 4:57 PM
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள தேவன் எஸ்டேட் பகுதியில் பெண் யானை இறந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள தேவன் எஸ்டேட் காபி தோட்டத்தில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் வந்து பாா்த்துவிட்டு உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனா். முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் வித்யா முன்னிலையில் முதுமலை கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனா். இதில் வனப் பகுதியில் சரிவான பகுதியில் வழுக்கி விழுந்ததில் மூக்குப் பகுதியில் அடிபட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு யானை உயிரிழந்துள்ளது என்றும், இறந்த யானைக்கு சுமாா் 30 வயது இருக்கும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா். யானையின் முக்கிய உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.