அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்
கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா கிராமத்துக்குள் 2 கரடிகள் உலவியதால் மக்கள் அச்சமடைந்தனா்.
கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா கிராமத்துக்குள் 2 கரடிகள் உலவியதால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள அம்பலமூலா கிராமத்துக்குள் 2 கரடிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்தன.
தொடா்ந்து, குடியிருப்புகளுக்கு அருகில் உலவிய கரடிகளைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்தனா்.
Advertisement
சிறிது நேரம் அப்பகுதியிலே உலவிய கரடிகள் பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றன.
குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் கரடிகளை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.