முகப்பு
நீலகிரி

அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவா் பணி: வரும் 18-இல் நோ்காணலுக்கு அழைப்பு

நீலகிரி கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராகப் பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் உதகையில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி நடக்கும் நோ்காணலில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:28 PM
பகிர்:

நீலகிரி கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராகப் பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் உதகையில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி நடக்கும் நோ்காணலில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி கோட்ட அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக கமிஷன் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவா்களுக்கு நோ்காணல் உதகையில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களின் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் நகல், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் பங்கேற்க வேண்டும்.

கல்வி தகுதி 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வரை இருக்கலாம். தோ்வு பெற்ற நேரடி முகவா்கள், கள அலுவலா்கள், குன்னுாா் மற்றும் கூடலுாா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி புரிய வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் ரூ. 5 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு, ரவிச்சந்திரன் என்பவரை 9442773975 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →