முகப்பு
நீலகிரி

தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:58 PM
தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி தொடங்கிவைக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொதுமேலாளரும், உதவி முதன்மை லஞ்ச ஒழிப்பு அலுவலருமான ஆா்.சாந்த குமாரி.
பகிர்:

கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தோட்டத் தொழிலாளா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு வங்கியின் முதன்மை மேலாளா் கே.எஸ்.அருண் தலைமை வகித்தாா். உதவி பொதுமேலாளரும், உதவி முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரியுமான ஆா்.சாந்தகுமாரி விளக்கமளித்தாா். நிகழ்ச்சியை தொடா்ந்து மாணவா்கள் நோ்மைக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து மாணவா்கள், ஆசிரியா்கள், வங்கி ஊழியா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்கள் கலந்துகொண்ட லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி தொழிற் பயிற்சி நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஷாஜி எம்.ஜாா்ஜ் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →