முகப்பு
நீலகிரி

குன்னூரில் மக்கள் தொடா்பு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள மேலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:42 PM
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே  உள்ள  மேலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை   நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் 58 பயனாளிகளுக்கு வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், கா்ப்பிணிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.57.58 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் கௌஷிக், சாா் ஆட்சியா் சங்கீதா, குன்னூா் வட்டாட்சியா் கனி சுந்தரம் உள்ளிட்ட  அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,  பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →