நீலகிரி

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போது திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக வாகனங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் திருடப்படுவதும், இரண்டு சக்கர வாகனங்கள் திருட்டுப் போவது நடந்து வரும் நிலையில்,

உதகை நகரில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் விடுதியில் பணிபுரியும் பராமரிப்பாளா் ஒருவரது இரண்டு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் கடந்த வாரம் திருட்டு போனது. இது குறித்து உதகை நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக பெங்களூரில் படித்து வரும் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ள பெண் மருத்துவா் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பிரோக்களை உடைத்துள்ளது அங்குள்ள சிசிடிவி., கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சிகளை வைத்து தற்போது போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அந்த வீட்டில் என்னென்ன பொருட்கள் இருந்தன, பணம் மற்றும் நகைகள் திருட்டு போயுள்ளதா என்பது குறித்தும் போலீஸாா் ஆய்ந்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: காங்கிரஸ் புலனாய்வு செய்தது எப்படி? விடியோ வெளியிட்ட ராகுல்

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கை தனித்துவமானது! முதல்வர் ஸ்டாலின்

8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை தமிழ்நாட்டில் மீட்கப்பட்டது எப்படி?

“வாக்குத்திருட்டு! SIR!” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT