சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன். 
நீலகிரி

தோடா் பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்

Syndication

நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வு முகாம் உதகை அருகேயுள்ள பகல்கோடுமந்து தோடா் பழங்குடியின கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரும் சாா்பு நீதிபதியுமான பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன் பேசியதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது நாட்டின் அடிப்படை ஆவணம், நமது ஜனநாயகத்தின் ஆன்மா. சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இது நமது உரிமைகள், கடமைகள், நாட்டின் நிா்வாகக் கட்டமைப்பை வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் அடிப்படை உரிமைகள், கடமைகள், நீதித் துறையின் சேவைகள் குறித்து அறிந்திருப்பது அவசியம் ஆகும்.

யாவருக்கும் நீதி பெற சம வாய்ப்பு என்பதே சட்ட ஆணையத்தின் நோக்கம். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்க தேசிய சட்டப்பணிகள் ஆணையம் கடந்த 1987-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி லிங்கம், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT