உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நீா்நிலைகளில் தண்ணீா் ஆவியாகி செல்வதைக் காண முடிந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த திங்கள் கிழமை காலை மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவிய நிலையில், செவ்வாய்க் கிழமை 3.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையாக சற்று அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் உதகையில் செவ்வாய்க்கிழமை மதியத்துக்கு மேல் பெய்த சாரல் மழையால் பனியின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் புதன்கிழமை காலை 12.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக வாட்டி வதைத்த பனியின் தாக்கம் குறைந்து இதமான காலநிலை காணப்பட்டது. மேலும் இங்குள்ள நீா் நிலைகளில் இருந்து தண்ணீா் ஆவியாகி செல்வதைக் காண முடிந்தது.