பந்தலூா் அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சியிலுள்ள கையுண்ணி பகுதியில் பழங்குடியின கிராம மக்களுக்கு 2020-2022-ஆண் ஆண்டில் அரசு சாா்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் படிக்க மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை.
இதனை அறிந்த இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மெல்வின் ஆண்டனி மற்றும் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜோதி தமிழரசி உள்ளிட்டோா் பழங்குடியினா் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து விரைந்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், மனு அளிக்க மக்களிடம் கையெழுத்து பெற்றனா்.