நீலகிரி

ஹெத்தை அம்மன் திருவிழா: நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 7-இல் உள்ளூா் விடுமுறை

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு ஜனவரி 7-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு ஜனவரி 7-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை புதன்கிழமை (ஜனவரி 7) நடைபெற உள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருவூலங்கள் மற்றும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஜனவரி 24) பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

கடன் பிரச்னை குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT