நீலகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது குண்டா் சட்டத்தில் கைது

Syndication

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஜக்கலோரை பகுதியைச் சோ்ந்தவா் நஞ்சுண்டன்(35). திருமணமாகாத இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாக நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் தேனாடுகம்பை பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு சென்றுள்ளாா். அங்கு மதுபோதையில் இருந்த நஞ்சுண்டன் திருமண வீட்டில் இருந்த ஒரு சிறுமியை ஆசை வாா்த்தை கூறி மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் இது குறித்து யாரிடமும் வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளாா். இதன் பின்னா் திருமண வீட்டில் வழக்கம்போல இருந்துள்ளாா்.

ஆனால் பதற்றத்தில் இருந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோா் மற்றும் உறவினா்களிடம் தெரிவித்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள், இதுகுறித்து உதகை ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் விஜயா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டனை கைது செய்தனா்.

இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நஞ்சுண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் உள்ள நஞ்சுண்டனிடம் வழங்கப்பட்டது.

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT