உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் வியாழக்கிழமை காலை மைனஸ் 2.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், புகா் பகுதியில் உறை பனியும் கொட்டியது.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த தலைகுந்தா, பட்பயா், மஞ்சூா், குந்தா, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் உறைபனி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் தொடா்ந்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பச்சை புற்கள் மீது பனி படா்ந்து வெள்ளை நிறத்தில் காணப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.