முகப்பு
நீலகிரி

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை!

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகிறார்...

Updated On : 12 மே, 2025 at 12:14 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு 127-ஆவது மலா் கண்காட்சி மே 15 முதல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து சாலை மாா்க்கமாக உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். உதகையில் இருந்து சென்னைக்கு மே 16-ஆம் தேதி திரும்புகிறாா்.