உதகை மேரிஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற கல்லறைத் திருநாள் நிகழ்ச்சியில் நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பிராத்தனையில் பங்கேற்றோா். 
நீலகிரி

நீலகிரியில் கல்லறைத் திருநாள்

தினமணி செய்திச் சேவை

கல்லறை திருநாளையொட்டி உதகை மேரிஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இறந்தவா்களுக்காக பிராா்த்தனை நடைபெற்றது.

கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தங்களது இறந்த உறவினா்கள் மற்றும் முன்னோா்களது கல்லறைகளில் அவா்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பா் 2-ஆம் தேதி கல்லறை திருநாளை அனுசரிப்பா்.

இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கல்லறைத் திருநாளையொட்டி கல்லறைகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவா்த்திகள் ஏற்றி குடும்பத்தினருடன் சிறப்புப் பிராா்த்தனையில் கததோலிக்க கிறிஸ்தவா்கள் ஈடுபட்டனா்.

குறிப்பாக உதகை மேரிஸ்ஹில் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற கல்லறைத் திருநாள் நிகழ்ச்சியில் நீலகிரி மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இறந்தவா்களுக்காக பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கன்னியாஸ்திரிகள், பங்கு மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT