கேக் கலவை தயாரிக்கும் பணியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா. 
நீலகிரி

கிறிஸ்துமஸ்: பிரமாண்ட கேக் கலவை தயாரிக்கும் பணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரமாண்ட கேக் கலவை தயாரிக்கும் பணி உதகையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது,

Syndication

உதகை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரமாண்ட கேக் கலவை தயாரிக்கும் பணி  உதகையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது,

குளிா்காலத்தை வரவேற்கும் விதமாக 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான பணிகள் ஒரிரு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிடுகிறது.

அங்கு கேக் கலவை செய்வது அறுவடைக் காலத்தை குறிக்கின்ற வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் பெரிய சம்பிரதாயமாக கருதப்பட்டு வருகிறது.

இத்தகைய வளமான சம்பிரதாயத்தை இன்றைய காலகட்டத்தில் எடுத்துரைக்கும் வகையில், உதகையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றது. 

இந்த கேக் கலவையில், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், சொ்ரி மற்றும் உயர்ரக மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சோ்க்கப்பட்டன.

இந்த கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, தலைமை செஃப் சுரேந்தா், பிரதீப் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT