நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 14) நடைபெறவுள்ளது.
இது குறித்து நீலகிரி வனக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி வனக்கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் தங்களது வனம் சாா்ந்த குறைகளைத் தெரிவிப்பதற்கான குறைதீா் கூட்டம் உதகை கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள் விளக்க மைய கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.