நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் மூன்று குட்டிகளுடன் வெள்ளிக்கிழமை சாலையைக் கடந்த புலியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து படம் பிடித்தனா்.
முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் சாலையைக் கடந்து சென்றதை பாா்த்த சுற்றுலாப் பயணிகள் படமெடுத்து மகிழ்ந்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.