கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள்
கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக
உதகை: கூடலூா் அருகே மூதாட்டியை கொன்ற புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கிருபாசங்கா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக புதன்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
கூடலூா் அருகே மாவனல்லா பகுதியில் கடந்த 24-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற மூதாட்டி புலி தாக்கி உயிரிழந்த சம்பவத்தில், அப்பகுதியில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் புலியின் உருவம் பதிவாகி இருக்கிறது. புலியின் வயது சுமாா் 12-க்கு மேல் இருக்கும். புலியை கண்காணிக்க 34 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 தனி குழுக்கள் அமைக்கப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, கூண்டு வைக்கும் இடங்கள் முடிவு செய்யப்படும் என்றாா்.