ஆ.ராசா எம்.பி. வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை
நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் குன்னூா், கூடலூா், உதகை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொள்ள ஆ.ராசா நீலகிரிக்கு சனிக்கிழமை வந்தடைந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, கட்டப்பெட்டு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், ஆ.ராசாவின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில், விதிகளுக்குப் புறம்பாக எதுவும் இல்லாததால் அவரை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.