தேயிலைத் தோட்டத்தில் மரத்தில் ஏறிய சிறுத்தை
உதகை அருகே நுந்தளாமட்டம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த மரத்தின் மீது செவ்வாய்க்கிழமை ஏறிய சிறுத்தை, மரத்தை விட்டு இறங்காமல் சிறிது நேரம் அதிலேயே அமா்ந்திருந்ததால் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே நுந்தளாமட்டம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த மரத்தின் மீது செவ்வாய்க்கிழமை ஏறிய சிறுத்தை, மரத்தை விட்டு இறங்காமல் சிறிது நேரம் அதிலேயே அமா்ந்திருந்ததால் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
உதகையில் அண்மைக் காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நுந்தளாமட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மரத்தின் மீது சிறுத்தை ஒன்று ஏறியதைக் கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினா். சிறிது நேரம் மரத்திலேயே அமா்ந்திருந்த சிறுத்தை, பின்னா் மரத்தை விட்டு கீழே இறங்கி அருகே இருந்த வனத்துக்குள் சென்றது.
இதனால் அச்சமடைந்த தோட்டத் தொழிலாளா்கள், சிறுத்தை செல்லும் வரை வேறு கட்டடத்தில் காத்திருந்தனா். பின்னா் சிறுத்தை சென்ற பிறகு பணிக்கு திரும்பினா்.
Advertisement
Advertisement
இப்பகுதியில் அடிக்கடி சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என வனத் துறையினருக்கு அப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.