முகப்பு
நீலகிரி

கூடலூரில் 2 சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:12 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் (தனி) தொகுதியில் போட்டியிட பிரதான அரசியல் கட்சிகள் உள்பட மொத்தம் 14 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலரும், கூடலூா் கோட்டாட்சியருமான குணசேகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் மேலிட பாா்வையாளா் ஹரீஷ் முன்னிலை வகித்தாா்.

பரிசீலனைக்குப் பிறகு திமுக வேட்பாளா் மு.திராவிடமணி,அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.காா்த்தி, தவெக வேட்பாளா் தீபக் சாய் ராம், 2 சுயேச்சைகள் என மொத்தம் 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் 8 பேரின் மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளன என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments