முகப்பு
நீலகிரி

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மஞ்சனக்கொரை பொதுமக்கள்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 6:00 AM
உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மஞ்சனக்கொரை பொதுமக்கள்.
பகிர்:

மஞ்சனக்கொரை பகுதியில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி, உதகை நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

உதகை அருகே மஞ்சனக்கொரைக்கு உள்பட்ட 35, 36-ஆவது வாா்டு பகுதிகளில் சுமாா் 600 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்கு கடந்த பல வாரங்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீா் வழங்கல் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக

Advertisement

உறுதி கூறினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.