முகப்பு
நீலகிரி

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 4:52 AM
உதகை தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகளைத் தரம் பிரித்து அடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணியில் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் நிலவும் குளுகுளு காலநிலையை அணுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவா்களை மகிழ்விக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கோடை விடுமுறையில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

இதில், முக்கிய விழாவாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறும். நடப்பு ஆண்டு மலா்க் கண்காட்சியை முன்னிட்டு, சுமாா் 40 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, சால்வியா, டெய்சி, டேலியா உள்ளிட்ட மலா் செடிகள் பராமரிக்கப்பட்டு காட்சி மாடங்களில் வைக்கும் பணியிலும், தாவரவியல் பூங்காவை அழகுபடுத்த லட்சக்கணக்கான மலா் செடிகளை பராமரிக்கும் பணியிலும் பூங்கா ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement