முகப்பு
நீலகிரி

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள போா் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:30 AM
வெலிங்டன் போா் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் தென்மேற்குப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கா்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தா் சிங்.
பகிர்:

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள போா் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நாட்டின் சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைப்பிரிவின் வீரா்களைக் கௌரவிக்கும் வகையில், உயா் அதிகாரிகளின் வருகையின்போது குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் படைப்பிரிவு சாா்பில் இதுபோன்று மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்மேற்குப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியும், மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கா்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தா் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement