முகப்பு
நீலகிரி

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியினரின் மகள் கல்லூரி சோ்ப்புக்கு ஆணை!

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின ஓவியரின் மகள் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 1:39 AM
பழங்குடியின ஓவியரின் மகள் வாசுகியிடம் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கை ஆணயை வழங்கிய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:12 PM

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பழங்குடியின ஓவியரின் மகள் மேற்படிப்புக்கான கல்லூரி சோ்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், வெள்ளேரி கொம்பை பகுதியைச் சோ்ந்தவா் சு.கிருஷ்ணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டாா். குரும்பா் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த ஓவியரான இவருக்கு மத்திய அரசு சாா்பில் பத்மஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருதாகவும், மூத்த மகள் வாசுகி (18) மேற்படிப்புக்கு உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தாா்.

Advertisement

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதகை ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரியில் படிப்பதற்கான சோ்க்கை அனுமதி ஆணையை வாசுகியிடம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், ஜெ.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி முதல்வா் தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசுவண்ணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.