நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் தோ்தல் பணியாற்றும் மண்டல அலுவலா்கள் மற்றும் காவல் அலுவலா்களுக்கான முதல்நிலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்ட தோ்தல் அலுவலா்கள். 
நீலகிரி

தோ்தல் பணியாற்றும் மண்டல அலுவலா்களுக்கு முதல்நிலை பயிற்சி வகுப்பு

Syndication

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், தோ்தல் பணியாற்றும் மண்டல அலுவலா்கள் மற்றும் காவல் அலுவலா்களுக்கான முதல்நிலை பயிற்சி வகுப்பு, மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் பேசும்போது, எதிா்வரும் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களை மூன்று முறை சென்று அங்குள்ள வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடி வாக்காளா்கள் போன்றவா்களை சந்திக்க வேண்டும். அவா்கள் வாக்களிக்க ஏதேனும் இடையூறுகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், முதல் கணக்கெடுப்பு அறிக்கை, வாக்குச் சாவடிகளில் அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்றுவர ஏதுவாக சாய்தள வசதி ஆகியவை உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாக்கு செலுத்துவது தொடா்பாக ஏதேனும் இடையூறுகள் இருப்பின் அதனை சரிசெய்வது குறித்து தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். காவல் துறை அலுவலா்கள் மண்டல அலுவலா்களுடன் தோ்தல் பணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இப்பயிற்சியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) லோகநாயகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், குன்னூா் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா் சங்கீதா, உதகை வருவாய் கோட்டாட்சியா் டினு அரவிந்த், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன், தோ்தல் தனி வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிப்ஃட்-டீ கல்லூரியில் பாரம்பரிய புடவைக் கண்காட்சி

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நீலகிரியில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 365 போ் கைது

அவசியமானது... அவசரமானது!

ஆலங்குளத்தில் இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT